புரட்சிப்பெண் கமலாதாஸ் சுரைய்யா
March 20, 2007கமலா தாஸ்- மாதவிக் குட்டி முப்பது ஆண்டு காலத்திற்கு மேல் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் எழுதிவரும் எழுத்தாளர். இது அவரின் புனை பெயர். அவரது எழுத்துகளால் மலையாள இலக்கிய வட்டத்தில் சிறப்பாகப் பேசப்பட்டவர்.
கமலா தாஸ் - இவரும் மாதவிக் குட்டியே! இயற்பெயர் கமலா. கணவனின் பெயரை இணைத்துதானே இந்தியப் பெண்கள் அடையாளம் காணப்பட வேண்டும்? அதன்படி கமலாதாஸ். இப்பெயரில் ஆங்கிலத்தில் எழுதினார். தன் கதையை அப்பட்டமாக தானே எழுதியமை சிலரின் வெறுப்பைப் பெற்றது. பலரின் வரவேற்பைப் பெற்றது.
தனக்குக் குழந்தை வேண்டும் என்று குந்தி கடவுள்களை வேண்டினாளாம்! பாரதம் எழுதுகிறது. முதலில் சூரியன் வந்தானாம். வயதுக்கு வராத குந்திக்குக் குழந்தைப் பேறைக் கொடுத்தானாம். கண்ணன் பிறந்தானாம். பின்னர் வரிசையாக வேறு வேறு கடவுள்கள்! நம்மிடம் கடவுள்களுக்கா தட்டுப்பாடு? அதுதான் 33 கோடி கடவுள்கள் உண்டே! மொத்தம் ஆறு குழந்தைகளைக் குந்தி இவர்களின் அனுக்கிரகத்தில் பெற்றாளாம்.அந்தக்காலத்தில் குடும்பக் கட்டுப்பாடெல்லாம் பார்ப்பனர்களுக்கு ஒத்துவராது!
தம் குடும்பத்துத் தாய்மார்கள் பக்திரசம் வழிய வழியச் சொல்லித் தீர்த்த இந்தக் கதைகள் 13 வயது மாதவிக் குட்டியின் மனதில் விதைத்தது என்ன தெரியுமா? விளைந்த செயல் என்ன தெரியுமா? குந்திதேவி மாதிரியே மாதவிக்குட்டியும் சூரியனை வேண்டினாள். தன் வீட்டு மொட்டை மாடியில் நின்று வேண்டினாள். சூரியனின் அனுக்கிரகம் முழுவதும் தன் மீது படவேண்டும் என்பதற்காக துணியின்றி நின்று வேண்டினாள். சூரியனின் பார்வை இவள்மீது படவில்லை. மாறாகப் பக்கத்து வீட்டு விடலைப் பையனின் பார்வைதான் பட்டது. மாதவிக் குட்டி பிரார்த்தனையை நிறுத்தி விட்டாள்.
"என் கதை" என்ற தலைப்பில் எழுதினார். ஒளிவு மறைவின்றி இன்னும் பல செய்திகளையும் எழுதினார். அவைதான் அஷாடபூதிகளின் கண்டனத்தையும் எதார்த்தவாதிகளின் பாராட்டையும் ஒருசேரப் பெற்றுத் தந்தது. அவரின் மலையாள, ஆங்கிலக் கவிதைகள் மிகச் சிறப்பானவை, இந்தியாவிலும் இங்கிலீசு பேசும் மக்களிடையேயும் பிரபலமானவை.
ஒருநாள் கமலாதாஸ் கேடுகெட்ட இந்து மதத்தை விட்டு வெறியேறினார். இசுலாத்தைத் தழுவினார்.இந்தியத் தாளுலகம் வழக்கம் போல ஓலமிட்டது, ஒப்பாரி வைத்தது. அவரின் இந்த முடிவுக்கான மூலக் காரணத்தைத் தெரிந்து கொண்டு அதைச் சீரமைக்க யாரும் முன்வரவில்லை. பெண் அடிமைத் தனத்தை உடைத்ததில் மலையாளத்தில் இவரே முதல்வர். இந்துமதக் கூட்டுப் பெட்டி மடமையை விட்டு வெளியேறி மதம் மாறியவர்.
இவரே மற்றொன்றையும் அறிவித்துள்ளார். தன் இறப்புக்குப் பின் தான் புதைக்கப்படக் கூடாது; எரிக்கப்பட வேண்டும் - அதிலும் மின்எரிகாட்டில் எவ்விதச் சடங்குகளும் இன்றி - என்று கூறிவிட்டார்.
இப்போது அவரின் பெயர் சுரய்யா. கமலா சுரய்யா. கமலா என்றால் தாமரை. சுரய்யா என்றால் விடிவெள்ளி. அவரும் விண்மீனாகத் தெரியும் கவிஞர்தான். தம்மைப் பெண் கவிஞர் என்றோ பெண் எழுத்தாளர் என்றோ குறிப்பிடக் கூடாது என்பவர். அய்ம்பதுக்கும் மேற்பட்ட புலவர்கள் சங்ககாலத்தில் பாடல்கள் எழுதிய பெண்கள் என்ற நிலை இருந்தும் இங்கே தமிழிதழ் நடத்துபவர்கள் பெண் எழுத்தாளர் என்றே அடையாளப் படுத்துகிறார்கள் அல்லவா? தமிழின் நிலையே அப்படி என்றால் மற்ற மொழிக்காரர் நிலை எப்படி வேறு மாதிரி இருக்கும்? அதுதான் அவர் பற்றியும்…
மலையாளச் சூழல் அவர் மனதை நோகடித்துவிட்டது. சிறிது பகையுள்ள இசுலாமியப் பெண் என்பதால் அடிக்கடி அவரிடம் பணம் கேட்டுத் தொல்லைப்படுத்தும் இசுலாமியப் பெயர் கொண்ட அமைப்புகள் கொஞ்சம் நோகடித்தன. புகழ்பெற்ற இவர் இந்து மதத்தை உதறிவிட்டுப் போனதால் இந்துத்துவ வெறியர்களுக்குக் கோபம். விளைவு… இவர் கொச்சியை விட்டுப் போய் விட்டார். புனேயில் தங்கப்போகிறார். அங்கே இவரின் மகன், மருமகள்,பேரன், பேத்திகளுடன் தங்கப் போகிறார்.
பெண் அடிமைத் தனத்தை உடைத்ததில் மலையாளத்தில் இவரே முதல்வர். இந்துமதக் கூட்டுப் பெட்டி மடமையை விட்டு வெளி-யேறி மதம் மாறியவர். இவரே மற்றொன்றையும் அறிவித்துள்ளார். தன் இறப்புக்குப் பின் தான் புதைக்கப்படக் கூடாது; எரிக்கப்பட வேண்டும் - அதிலும் மின்எரிகாட்டில் எவ்விதச் சடங்குகளும் இன்றி - என்று கூறிவிட்டார்.
சாவுக்குப் பின் செய்யப்படும் சடங்குகளில் தனக்கு நம்பிக்கையில்லை எனக் கூறிவிட்டார். (இப்படித்தான் நேருவும் எழுதிவைத்தார். ஆனால் இந்திராகாந்தி செய்தது என்ன என்பது நினைவிருக்கலாம்) எலும்புகளை நீரில் கரைக்க ஆற்றில் மூழ்க வேண்டாம்! அதனால் சளி பிடிக்கும். காய்ச்சல் வரும். உனக்குக் காய்ச்சல் வந்தால், மகனே! என் மனம் வருந்தும். எனவே எதையும் செய்யாதே என இதிலும் தன் நகைச்சுவையைக் காட்டியுள்ளார்.
இசுலாத்திலும் கிறித்தவத்திலும் மறுபிறப்பு கிடையாது. இறுதித் தீர்ப்பு நாள் உண்டாம். அன்றைய நாளில் நீதிபதியின் முன்பு "ஆஜராக" வேண்டும்.அதற்கு வாய்ப்பாகப் பிணம்-எலும்புக் கூடாகவோ, மட்கிய மண்ணாகவோ இருக்க வேண்டுமாம் - எனவே எரிக்கக் கூடாதாம் - புதைக்க வேண்டும்! இந்த மதக் கோட்பாட்டின் மண்டையில் அடிக்கிறார் சுரய்யா! மாதவிக்குட்டி, கமலாதாஸ், கமலா சுரய்யா புதுமைப் பெண் அல்ல! புரட்சிப் பெண்!
http://www.unmaionline.com/20070302/12.htm
சிலநாட்களுக்கு முன் தசுலிமா நசுரினுக்கு ஆதரவாக காவடி தூக்கிய இந்துதுவாவாதிகள் கமலா பார்ப்பனீயப் புரட்டுகளைப் பற்றி சொன்னதற்காக செய்த இடைஞ்சல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பார்ப்பனர்களின் இரட்டைவேடம் இது. எனக்கு வியப்பான விசயம் என்னவென்றால், இசுலாமியராக மாறிய கமலா சுரைய்யா, தான் இறந்தபின் ஏன் புதைக்கக் கூடாது என்றார்? இசுலாமியர்கள் இம்மை-மறுமை என்று பேசுவார்களே. கமலா சுரைய்யா அதிலிருந்து முரன்படுகிறாரே? இதுபற்றி இசுலாமிய அன்பர்களின் கருத்து என்ன?


//இசுலாமியராக மாறிய கமலா சுரைய்யா, தான் இறந்தபின் ஏன் புதைக்கக் கூடாது என்றார்?//
அய்யா அறிவுக்கடலே!
சகோதரி கமலா சுரய்யா அப்படி சொன்னதுக்கு ஆதாரம் இருக்கா?
அவங்க சொன்னதாக கட்டிவிடப்பட்ட கதைகள்ல இதுவும் ஒண்ணா இருக்கப்போவுது.
முதலில் ஆதாரம் கொடுங்கள். பின்னர் பார்ப்போம்.
Comment by இறை நேசன் — March 20, 2007 @ 9:13 am
யாரிடம் எப்போது சொன்னார்?
உண்மை ஆன்லைல் கமலா சுரையாவிடம் பேட்டி எடுத்து வெளியிட்டதா? அல்லது உட்டாலக்கடி வேலையா?
Comment by அழகு — March 20, 2007 @ 9:24 am
1) சகோதரி கமலா சுரய்யா அப்படி சொன்னதுக்கு ஆதாரம் இருக்கா?
2)உண்மை ஆன்லைல் கமலா சுரையாவிடம் பேட்டி எடுத்து வெளியிட்டதா? அல்லது உட்டாலக்கடி வேலையா?
இறைநேசர் & அழகர்,
‘உண்மை’ யில் படித்ததையே எழுதினேன். மேலதிக தகவல் தேவைப்பட்டால் ஆசிரியருக்கு மடலிடலாமே?
Comment by அறிவுடைநம்பி — March 25, 2007 @ 7:27 am
//எனக்கு வியப்பான விசயம் என்னவென்றால், இசுலாமியராக மாறிய கமலா சுரைய்யா, தான் இறந்தபின் ஏன் புதைக்கக் கூடாது என்றார்? இசுலாமியர்கள் இம்மை-மறுமை என்று பேசுவார்களே. கமலா சுரைய்யா அதிலிருந்து முரன்படுகிறாரே? இதுபற்றி இசுலாமிய அன்பர்களின் கருத்து என்ன?//
இதற்கு யாருமே பதில் சொல்லவில்லையே?
Comment by அறிவுடைநம்பி — March 25, 2007 @ 7:29 am
//எனக்கு வியப்பான விசயம் என்னவென்றால், இசுலாமியராக மாறிய கமலா சுரைய்யா, தான் இறந்தபின் ஏன் புதைக்கக் கூடாது என்றார்? இசுலாமியர்கள் இம்மை-மறுமை என்று பேசுவார்களே. கமலா சுரைய்யா அதிலிருந்து முரன்படுகிறாரே//
As for as I know- I did not hear/read until now about this words from Kamala Surayyah!!!
Asalamone
Comment by asalamone — March 26, 2007 @ 7:40 am