இந்தியாவைத் தோற்கடித்த கிருஷ்ணன்!!!
March 19, 2007கிரிக்கெட் விளையாட்டுகளில் அவசியமே இல்லாமல் மதவெறியூட்டி வன்மத்தை வளர்த்து மதச்சண்டைகள் எக்காரணம் கொண்டும் ஓய்ந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் நம்நாட்டு காவிக்கும்பல், இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளின்போது முஸ்லிம் ரசிகர்களுடன் வம்பு செய்வார்கள்.
இந்திய வீரர்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக பார்ப்பன புரோகிதர்கள் புதுப்புது பூசை புணஸ்கரங்களைச் செய்து மக்களை ஏமாற்றி ரசிகர்களிடமும் உண்டியல் குலுக்கி காசுபார்ப்பதை கண்டுபிடித்துள்ளார்கள்.
கிரிக்கெட் செய்திகளைத் தேடியதில் இன்னொரு வினோதமான செய்தியும் கண்ணில் பட்டது! பங்களாதேஷிலுள்ள இந்துக்கள், அந்நாட்டு அணி வெற்றிபெற வேண்டுமென்பதற்காக "Astitte Bangladesh" என்ற இயக்கத்தை சேர்ந்தவர்கள் கிருஷ்ண பரமாத்வுக்கு "Jagyo" பூசை செய்து பங்களாதேஷை வெற்றி பெறச் செய்ய ஆதரவு கேட்டிருக்கிறார்களாம்! மெளலவி பஜாரிலுள்ள காளி கோயிலில் முந்தாநாள் பூசைக்கு அனைவரையும் அழைத்துள்ளார்களாம்! நேற்றிரவு நடந்த போட்டியில் கிருஷ்ணன், பங்களாதேஷிகளின் கோரிக்கையை ஏற்று இந்தியாவைத் தோற்கடித்து விட்டார். இந்தியர்களின் முதுகில் குத்திய நன்றி கெட்டத்துரோகி கிருஷ்ணனை என்ன செய்யலாம்? செய்திக்கான சுட்டி : http://in.sports.yahoo.com/070316/43/6ddd4.html


//கிரிக்கெட் விளையாட்டுகளில் அவசியமே இல்லாமல் மதவெறியூட்டி வன்மத்தை வளர்த்து மதச்சண்டைகள் எக்காரணம் கொண்டும் ஓய்ந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் நம்நாட்டு காவிக்கும்பல், இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளின்போது முஸ்லிம் ரசிகர்களுடன் வம்பு செய்வார்கள். //
//நேற்றிரவு நடந்த போட்டியில் கிருஷ்ணன், பங்களாதேஷிகளின் கோரிக்கையை ஏற்று இந்தியாவைத் தோற்கடித்து விட்டார். இந்தியர்களின் முதுகில் குத்திய நன்றி கெட்டத்துரோகி கிருஷ்ணனை என்ன செய்யலாம்? //
கலவரம் ஏற்படுத்த முயல்வது இந்துக்கள் மட்டும் தானா அல்லது முன்னுகுப் பின் முரணான உங்கள் எழுத்துமா??
let us not try to exploit tha situation
Thanks
M.Vijayan
Comment by M.Vijayan — March 19, 2007 @ 11:07 am