குரங்குகள் கட்டிய பாலம்
March 1, 2007சாதாரணமாக போக்குவரத்திற்காக பாலம் கட்ட பொறியாளர்,கொத்தனார், சித்தாள், சிமெண்ட், மணல், ஜல்லி ஆகியவை குறைந்த பட்சத் தேவைகள் என்பதை அறிவோம். உலகத்திலேயே இவை எதுவுமின்றி ஒரு பாலம் இருக்கிறது அதுவும் சுமார் பத்து கிலோ மீட்டர் தூரத்திற்கு இரு நாடுகளை இணைக்கும் பாலம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஆம், நம் நாட்டின் தென்கோடியிலுள்ள இராமசுவரத்திலிருந்து இலங்கைக்கு பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அனுமார் பாலம்! அமெரிக்காவின் நாஸாவிலிருக்கும் பார்ப்பனர்களால் திட்டமிட்டு பரப்பப்பட்ட இந்த ஆரியப் புரட்டை தினமலம் உள்ளிட்ட நாளிதழ்களும் பார்ப்பனச் சிறுக்கி செயலலிதாவும் அடிக்கடி சொல்லி சல்லியடிக்கிறார்கள்
அயோத்தியில் இராமன் பிறந்ததாகக் கூறப்படும் ‘இராமஜென்ம பூமி’யில் தான் - அதுவும் தற்போது இடிக்கப்பட்டுள்ள பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று அண்மைக் காலமாக அடம்பிடித்து வந்த இந்த இந்து வெறியர்களும் அவர்களின் நிறுவனமான ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் இப்போது இந்திய மய்ய அரசின் திட்டமான சேதுக்கடல் திட்டத்தின் ஒருபகுதியான கடலை ஆழப்படுத்தும் பணிக்கு ஊறு செய்யும் வகையில் இவர்களின் கற்பனையான ‘இராமர் பாலத்தைச் சேதப்படுத்தக்கூடாது - எனக் கூப்பாடு போட்டு வருகிறார்கள்.
இதுபற்றி இந்து முன்னணியைச் சேர்ந்த இராம.கோபால அய்யரும் அவரது கும்பலும் சிலபல நாட்களாகவே குரல் கொடுத்துக் குழப்பம் விளைவித்து வருகிறார்கள்.தற்போது, இராமேசுவரம் பகுதியில் கடலை ஆழப்படுத்தும் பணியை நிறுத்தக்கோரி வழக்குத் தொடர்ந்துள்ள இராமநாதபுரம் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் குப்பு ராமு அவர்களின் கருத்து ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழில் வெளிவந்து அதன் ஒரு பகுதி 18.1.2007ஆம் நாளிட்ட ‘காலைக்கதிர்’ நாளிதழில் எடுத்து வெளியிடப்பட்டுள்ளது.
புராணங்கள் புகல்கின்றனவாம்!
அதில் அவர் கூறுகிறார்:“ராமேசுவரத்துக்கும் இலங்கைக்கும் இடையே ராமர் பாலம் அமைக்கப் பட்டதாகப் புராணங்கள் சொல்கின்றன. தற்போது தனுஷ்கோடியிலிருந்து பார்க்கையில் திட்டுத் திட்டாகத் தெரியும் மணல் மேடுகளின் கீழ்ப்பகுதியில்தான் இந்தப் பாலம் உள்ளது.”
பொய்யான கதை மெய்யானதாகுமா?
இவர் கூறுவதைப் பார்த்தால், புராணங்-களில் கூறப்பட்டுள்ள செய்திகள் எல்லாம் உண்மையாகி விடுமா? வரலாறாகி விடுமா?
“பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கக்கத்தில் வைத்துக் கொண்டு கடலில் முழுகினான் ஓர் அரசன்” என்றுதான் புராணம் கூறுகிறது.இதனால் இந்தக் கதை உண்மையாகி-விடுமா? புராணத்தில் கூறப்பட்டதாலேயே உருண்டையான பூமி தட்டையாகி விடுமா? இக்கருத்து அறிவியலுக்கு ஏற்புடையதாகி விடுமா?
அறிவியலாளர்கள் உரைப்பதென்ன?
தனுஷ்கோடிக்கும் தலை மன்னாருக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மணல் திட்டுகளின் வடபுறம் கடல் நீரோட்டம் இடமிருந்து வலமாகவும், தென்புறம் வலமிருந்து இடமாக இருப்பதால் இடையில் அமைந்துள்ள பகுதியில் மணல் சேர்ந்து, அவற்றின் மேல் பாசிப் படிமங்கள் தோன்றி, பாலம் போன்ற அமைப்பாக உருவானதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
இயற்கை - செயற்கை அல்ல!
மேற்கூறிய மணல் திட்டுகள், நேராக, பாலம் போன்று இணைக்காமல் வளைந்து, காணப்படுவதும் இவை இயற்கையாக உருவானதற்குச் சான்றாக விளங்குகிறது.
இதனைத்தான், ‘மணல் திட்டுகளின் அடியில் இராமர் கட்டிய பாலம் இருக்கிறது’ என்கிறார் இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்.
எது உண்மை?
அவர் மேலும் கூறுகிறார்:
“இப்படி ஒரு பாலம் இருக்கிறதா? எனச் சந்தேகம் வரலாம் ஆனால் கடலின் அடியில் பாலம் என்பதுதான் உண்மை. இதைக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’ தெளிவு-படுத்தியுள்ளது. (நாஸாவின் பார்ப்பனர்களின் எண்ணிக்கை மற்ற அமெரிக்க நிறுவனங்களில் இருப்பதைவிட சற்று அதிகம் என்பதைக் கவனத்தில் கொள்க)
அதைத் தொடர்ந்து, பல ஆண்டுகளாக எடுத்த படங்களையும் ‘நாசா’ வெளியிட்டுள்ளது.
சுமார் பதினேழு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது அது என, ‘நாஸா’ சொல்கிறது.”
சொல்லாத உண்மை
‘நாசா’ விண்வெளி ஆய்வு மையம் இதுபற்றிய படங்களை வெளியிட்டுள்ளது உண்மையே!
அது வெளியிட்டுள்ள படங்களில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கடல் மட்டத்திற்குச் சற்று, கீழே நீண்ட மணல் திட்டுகள் ஒரு பாலத்தைப் போன்று இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
இந்தப் படங்கள் குப்புராமு கூறுவது போல சில ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்படவில்லை. பல ஆண்டுகளுக்கு முன் ‘நாசா’ வெளியிட்ட படங்கள் அவை.ஆனால், “இவற்றின் வயது பதினேழரை இலட்சம் ஆண்டுகள் என்றோ, அல்லது இவை மனிதனால் உருவாக்கப்பட்டது என்பதா-கவோ, எப்போதும் தகவல் வெளியிடவில்லை.”
என, நாசா அறிவியலாளர்கள் திட்ட வட்டமாக மறுத்துவிட்டனர்.
நாங்களா சொன்னோம்?
குறிப்பாக, ‘இந்தப் பாலத்தை இராமாயண காலத்தில் கட்டினார்கள் என்று நாங்கள் கூறவே இல்லை’ என ‘நாசா’ அறிவியலாளர்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.
குதியாட்டம் போடுவதா?
அப்படியானால், இப்படிப்பட்ட தகிடுதத்த வேலையை - பித்தலாட்ட திரிபுக் கருத்து எப்படி வெளிவந்தது?
‘இன்டோ லிங்க்காம் - வைஷ்ணவ நியூஸ் நெட் ஒர்க்’ என்னும் இணைய தள அமைப்புதான் இத்தகைய செய்தியை - ‘நாசா’ கூறாத செய்தியை நா கூசாமல் வெளியிட்டது.இதனை வைத்துக் கொண்டு-தான் இந்தக் குப்பு ராமு ஒரே குதியாட்டம் போட்டு நீதிமன்றத்தின் நெடிய வாயிலிலே போய் நின்று கொண்டிருக்கிறார்.
மறுப்புக் கோவை
இந்த இணையதளத்தின் பொய்யான - புரட்டான தகவலை அது வெளிவந்த காலகட்டத்திலேயே சில அறிவியல் வரலாற்று ஆய்வாளர்கள் மறுத்துள்ளனர்.
இதனை சன்டே டைம்ஸ் (Sunday Times) ஏடு 20.10.2002இல் வெளியிட்டுள்ளது.
அவற்றின் சில பகுதிகளை மட்டும் வெளியிடுவது பொருத்தமாக இருக்கும்.
எந்தத் தொடர்பும் இல்லை
ஜே.வி. நர்னீகர் என்பவர் புகழ்மிகு வானியல் - இயற்பியல் வல்லுநர் (Astrophysieist):
“கட்டுக்கதையாக (Myth)க் கூறப்படும் பாலத்தைக் கண்டுபிடித்துள்ளதாக வந்த செய்தியைக் கண்டேன். ஆனால், நாசாவின் கண்டுபிடிப்பிற்கும் இராமாயணப் பாலத்திற்கும் தொடர்பு இருப்பதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை!” என அவர் கூறியுள்ளார்.
சான்றுகள் இல்லையே!
ஆர்.எS.சர்மா எனப்படும் இராம் சரண் சர்மா என்பவர் ஒரு மூத்த வரலாற்று ஆய்வாளர்.
அவர் கூறுகிறார்: “இராமாயண காலப் பாலம் கட்டியதற்கு அகழ்வு ஆராய்ச்சிச் சான்றோ இலக்கியச் சான்றோ இல்லை. பாலம் போலத் தோன்றும் மணல் திட்டுக்களின் காலம் பதினேழரை லட்சம் ஆண்டுப் பழைமையது என்றே வைத்துக் கொண்டாலும், அந்தக் காலத்தில் மனிதர்களே இல்லை.
கிடைத்துள்ள சான்றுகளின் படி, இராமாயணம் எழுதப்பட்ட மிகப் பழங்காலம் கி.மு. 400 ஆகும்.
அய்ந்து கட்டங்களாக அது, வெவ்வேறு காலங்களில் விரிவு படுத்தப்பட்டது. 6000 சுலோகங்களாக இருந்த வால்மீகி ராமாயணம் கி.பி. 1200இல் 24,000 சுலோகங்களாக விரிந்தது.
இராமாயணக் கதை பற்றியே இலக்கியச் சான்று கி.மு. 1500 ஆண்டுகளுக்கு முன்பு இல்லை.
கதையில் கூறப்படும் பாலம் மற்றும் இலங்கை ஆகியன எந்த இடத்தில் இருந்தன என்பதையே இன்னும் முற்றாக அறிய முடியவில்லை.”
கேலிக்கூத்து
டில்லிப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டி.என்.ஜா ஒரு மூத்த வரலாற்றுப் பேராசிரியர்.
டி.என்.ஜா பின்வரு-மாறு கூறியுள்ளார்:
“நாசா” ஒளிப்படக் கருவி பிடித்த படங்கள் ஒரு புவியியல் வடிவமைப்பைக் காட்டுவன.
இயற்கையாக உருவான மணல் திட்டுகளின் தொடர்தான் காணப்படுகின்றது.இத்தொடர் ஒரு புவியியல் செய்திதான்! வரலாற்றுச் செய்தியன்று.
இராமனுடனும், இராமாயணத்துடனும் அதைத் தொடர்புபடுத்துவது கேலிக்குரியது.
காண்பன எல்லாவற்றையும் இராமாயணத்துடனும் மகாபாரதத்துடனும் இணைத்துச் சொல்வது கட்டுக் கதைதான்; வரலாறு ஆகாது!”
மனித இன மலர்ச்சி
இந்த இந்து வெறியர்கள் கூறுவது போல அவர்கள் கூறும் இராமர் பாலம் பதினேழரை லட்சம் ஆண்டுகள் என்பதாகவே வைத்துக் கொள்வோம்.
மனித இனவளர்ச்சியை ஆய்வோமானால் மதி மனிதன் (Homo Sapiens) எனப்படும் மனித இனம் தற்கால வகை மனித இனம் தோன்றியது ஏறத்தாழ 2 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தித்-தான். அதற்கும் முற்பட்ட நிமிர்நடை இனம் (Homo Erectus) எனப்படுவது குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட உயிரினங்கள் 7 லட்சம் ஆண்டுகட்கு முன்னர்தான் ஆஃபிரிக்காவிலிருந்து வெளிவந்தன.
குரங்குக் கூட்டமாக…
தற்போதைய மனித இனம் ஏறத்தாழ இரண்டரை அல்லது மூன்று லட்சம் ஆண்டுகட்கு முன்னர்தான் தோன்றின.
கண்டுபிடிக்கப்படாத கருவிகள்
கோடரி போன்ற ஆயுதங்கள், கருவிகள்-கூட அப்போது கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆனால் அந்தக் காலத்தில், இராமன் கருவிகள் கொண்டு பாலம் அமைத்ததாகக் கூறப்படுவது நம்பத்தகுந்ததா? அறிவியலுக்குப் பொருந்துவதா?
இராமன், இராவணன் போன்றோர் அரண்மனைகளில், மாடமளிகைகளில் இருந்து ஆட்சி புரிந்ததாகவும் பல்வகை அஸ்திரங்களைக் கொண்டு போர் புரிந்ததாகவும் கூறப்படுவது அறிவுக்குப் பொருந்துவதாக உள்ளதா? இல்லை! இல்லை! இல்லவே இல்லை!
நிறுத்து! நிறுத்து!
இப்படிப்பட்ட நிலையில், தொடர்ந்து குப்பு ராமு கூறுகிறார்:
“தற்போது சேது சமுத்திரத் திட்டத்துக்காக கடலை ஆழப்படுத்தும் பணி இந்த ராமர் பாலத்தை நெருங்கிவிட்டது. அவ்வாறு ஆழப்படுத்தும்போது, இந்தப் பாலம் சேதம் அடையும் என்கிறார்கள். பாலம் உடைவதைத் தடுக்கத்தான் கடலின் அகழாயும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்கிறோம்”
யாரோ? அவர் யாரோ?
கடலை ஆழப்படுத்தும்போது இராமர் பாலம் சேதமடையும் என்கிறார்களாம்!
யார் அப்படிக் கூறுகிறார்கள்? அவர்கள் யார்? சொல்வாரா குப்புராமு அவர்கள்?
கடலில் பாலம் போன்றுதான் தோற்றமுள்ளதே தவிரப் பாலம் எதுவும் இல்லை என்கிறபோது அது எப்படிச் சேதமடையும்?
ஆசையைப் பாருங்கள்!
கற்பனையான பாலம் கற்பனையாகச் சேதம் அடையுமா? இந்தக் கற்பனையான கட்டுக் கதையான பாலத்துக்காக சேது சமுத்திரத் திட்டம் நிறுத்தப்படவேண்டுமாமே!
பொருளாதார, அரசியல், சமுதாய, மக்கள் நல அடிப்படையில் உருவாகும் சேது சமுத்திரத் திட்டத்தின் கடல், ஆழப்படுத்தும் பணி, வெறும் இந்து மத நம்பிக்கையிலான ஆதாரமற்ற, அறிவியல் அடிப்படையில்லாத பொய்யான பாலத்துக்காக நிறுத்தப்பட வேண்டுமா?அப்படியே ஏற்க வேண்டுமா?
அவர் தொடர்ந்து கூறுகிறார்:
“வழிபாட்டுக்குரிய புனிதச் சின்னம் உடைக்கப்பட்டு விடக் கூடாது என்பது தான் எங்கள் கோரிக்கை” இல்லாத,கற்பனையான மத நம்பிக்கையின் வழியிலான பாலம் வழிபாட்டுக்குரியதாம்! புனிதச் சின்னமாம்!
இவர்கள் கூறுவதை அரசு அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமா? இது என்ன இந்து மத நாடா? இது என்ன இந்துமத அரசா? வழிபாட்டுக்குரிய புனிதச் சின்னம் பிள்ளையார் சிலையினை மட்டும் உடல் பகுதிகளை வெட்டி, அறுத்து, உடைத்துத் துண்டுத் துண்டாக ஆக்கிக் கடலில் கரைக்கலாமா? பதில் கூறுவாரா இந்த ஆர்.எஸ்.எஸ்.ஆசாமி?
மதவெறி மாய்ப்போம்
மேலும் கூறுகிறார்: “இந்தப் பாலத்தைச் சேதப்படுத்தாமல் மாற்றுப் பாதையில் திட்டம் வகுக்க வேண்டும்” சேது சமுத்திரத் திட்டத்திற்கான கடலியல், சுற்றுப் புறச் சூழலியல், பொறியியல் வல்லுநர்கள் கூறுவதை விட்டுவிட்டு இப்படிப்பட்ட கோமாளித்தனமான, மூட நம்பிக்கையாளர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டுமா?
நடக்காது; நடக்கக் கூடாது! நடக்கவும் விடலாகாது! இந்து மத வெறி மண்டையில் ஏறி, மூளையில் ஊறி இப்படி எல்லாம் பிதற்றுவதை இப்படிப்பட்டவர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்! இல்லையேல் நிறுத்த வைப்போம்!


See http://eyekans.blogspot.com/2007/02/21.html
Comment by 2 — March 5, 2007 @ 4:27 am