திருப்பதி 7மலை பக்த கோடிகளின் கவனத்திற்கு…

March 29, 2007

சாமான்ய ஏழைகளுக்கு பார்ப்பனக் கோவில்களில் இடமில்லை. திருமாள் & வெங்கடேசனின் பெயரால் கோடி கோடியாகக் காணிக்கை வசூலித்து பார்ப்பனப் பண்ணாடைகள் மட்டுமே பங்கு வைத்துக் கொள்வார்கள். வசூல் ராஜாவாக திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தை பாருங்கள். (பார்ப்பன பண்ணாடைகள் எத்தகைய கட்டனமும் செலுத்துவதில்லை!)

திருப்பதி + திருமலை  வெங்கடேசப் பெருமாள் பூஜைக் கட்டணங்கள் என பலவகைக் கொள்ளை கள் நடைபெற்று வருகின்றன. இதுபற்றிய விவரங்களை `ஹேதுவாதம்’ (பகுத்தறிவு) என்ற தெலுங்கு மாத இதழ் சனவரி 2007 இதழில் தந்துள்ள விவரங்கள் (?!) வருமாறு:

சுப்ரபாதம் + ரூ.120
அர்ச்சனை + ரூ.220
கல்யாணோத்சவம் + ரூ.1000
ஆர்ஜித பிரம்மோத்சவம் + ரூ.1000
வசந்தோத்சவம் + ரூ.3000
ஏகாந்த (தனி) சேவை + ரூ.120
அஷ்டதள பாதபத்மாரதன
(என்ன இழவோ?) + ரூ.2500
திருப்பாவாடை + ரூ.5000
க°தூரிக் கிண்ணம் -+ ரூ.150
நிஜ(!)பாத தரிசனம் + ரூ.100
தோமால சேவை + ரூ.220
அர்ச்சனந்தர
(பூஜைக்குப் பிந்தைய) தரிசனம் + ரூ.1000
டோலோத்சவம் + ரூ.1000
விசேஷ பூஜை + ரூ.3000
சக°ர கலசாபிஷேகம் + ரூ.5000
புராபிஷேகம் + ரூ.750
புனுகு கிண்ணம் + ரூ.300
வ°திராலங்கார (ஆடை அலங்காரம்)
சேவை* + ரூ.12,250
(* மீதி நேரங்களில் எல்லாம் அம்மண சேவையோ?)
கோயில் ஆழ்வார் + ரூ.3000
திருமஞ்சனம் + ரூ.3000
வசந்தோத்சவம் + ரூ.5000
பவித்ரோத்சவம் (பவித்ரம்-மோதிரம்) + ரூ.5000
புஷ்ப யாகம் + ரூ.3500
தெப்போத்சவம் + ரூ.2500
அபிதேயக அபிஷேகம் + ரூ.5000
புஷ்ப (பூ) பல்லக்கு + ரூ.1000

இவை தவிர, துண்டு துக்கடா கொள்ளைகளைத் தவிர, ஒட்டுமொத்தமான + காலை சுப்ரபாதத்திலிருந்து (சோம்பேறி சாமி! நாள்தோறும் காலையில் சுப்ரபாதம் பாடினால்தான் எழுந்திருக்கும் என்றால், அது சோம்பேறி சாமி அல்லாமல் வேறென்ன?) இரவு சயன (தெலுங்கில் சயனிம்பு) சேவை வரையில் பார்த்துப் பார்த்து உலக மகா ஏமாளியாக வேண்டு மென்றால், கட்டணம் ஒன்றும் அதிகமில்லை! வெறும் பத்து லட்சம் ரூபாக்கள்தான். (இவ்வளவு பெரிய தொகையைக் கட்டி ஏமாந்தவர்களின் எண்ணிக்கை விவரத்தை, கம்மம் நகரத்தைச் சேர்ந்தவரும், அண்மையில் “மலய சிறீ’’ இலக்கிய விருது (மலய சிறீ ஒரு பகுத்தறிவுக் கவிஞராம்) பெற்றவருமான கிராந்திகர் என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் (கடந்த காலத்தில் அய்தராபாத் இன்னய்யா மற்றும் விசாகப்பட்டினம் ஜெயகோபால் ஆகியோரும் இந்த மலயசிறீ விருதைப் பெற்றுள்ளனர்) ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் பகுத்தறிவு (ஹேதுவாதம்) வெளியிடவில்லையே ஏன்?

தமிழில்: தெலுங்குப் பலகணி
தரவு: ஹேதுவாதம், தெலுங்கு திங்களிதழ்,
சனவரி 2007, பக்கங்கள்: 2, 6, 7, 30

http://viduthalai.com/20070328/news03.htm

பெரியார் திரைப்படப் பாடல்கள் (MP3)

March 25, 2007

http://www.viduthalai.com/periyarmovie/

கடைசிச் செய்தி
“பெரியார்’’ படம் வழக்குத் தள்ளுபடி

“பெரியார்’’ திரைப் படத்தைத் தடை செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி தொடுத்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.

புரட்சிப்பெண் கமலாதாஸ் சுரைய்யா

March 20, 2007

கமலா தாஸ்- மாதவிக் குட்டி முப்பது ஆண்டு காலத்திற்கு மேல் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் எழுதிவரும் எழுத்தாளர். இது அவரின் புனை பெயர். அவரது எழுத்துகளால் மலையாள இலக்கிய வட்டத்தில் சிறப்பாகப் பேசப்பட்டவர்.

கமலா தாஸ் - இவரும் மாதவிக் குட்டியே! இயற்பெயர் கமலா. கணவனின் பெயரை இணைத்துதானே இந்தியப் பெண்கள் அடையாளம் காணப்பட வேண்டும்? அதன்படி கமலாதாஸ். இப்பெயரில் ஆங்கிலத்தில் எழுதினார். தன் கதையை அப்பட்டமாக தானே எழுதியமை சிலரின் வெறுப்பைப் பெற்றது. பலரின் வரவேற்பைப் பெற்றது.

தனக்குக் குழந்தை வேண்டும் என்று குந்தி கடவுள்களை வேண்டினாளாம்! பாரதம் எழுதுகிறது. முதலில் சூரியன் வந்தானாம். வயதுக்கு வராத குந்திக்குக் குழந்தைப் பேறைக் கொடுத்தானாம். கண்ணன் பிறந்தானாம். பின்னர் வரிசையாக வேறு வேறு கடவுள்கள்! நம்மிடம் கடவுள்களுக்கா தட்டுப்பாடு? அதுதான் 33 கோடி கடவுள்கள் உண்டே! மொத்தம் ஆறு குழந்தைகளைக் குந்தி இவர்களின் அனுக்கிரகத்தில் பெற்றாளாம்.அந்தக்காலத்தில் குடும்பக் கட்டுப்பாடெல்லாம் பார்ப்பனர்களுக்கு ஒத்துவராது!

தம் குடும்பத்துத் தாய்மார்கள் பக்திரசம் வழிய வழியச் சொல்லித் தீர்த்த இந்தக் கதைகள் 13 வயது மாதவிக் குட்டியின் மனதில் விதைத்தது என்ன தெரியுமா? விளைந்த செயல் என்ன தெரியுமா? குந்திதேவி மாதிரியே மாதவிக்குட்டியும் சூரியனை வேண்டினாள். தன் வீட்டு மொட்டை மாடியில் நின்று வேண்டினாள். சூரியனின் அனுக்கிரகம் முழுவதும் தன் மீது படவேண்டும் என்பதற்காக துணியின்றி நின்று வேண்டினாள். சூரியனின் பார்வை இவள்மீது படவில்லை. மாறாகப் பக்கத்து வீட்டு விடலைப் பையனின் பார்வைதான் பட்டது. மாதவிக் குட்டி பிரார்த்தனையை நிறுத்தி விட்டாள்.

"என் கதை" என்ற தலைப்பில் எழுதினார். ஒளிவு மறைவின்றி இன்னும் பல செய்திகளையும் எழுதினார். அவைதான் அஷாடபூதிகளின் கண்டனத்தையும் எதார்த்தவாதிகளின் பாராட்டையும் ஒருசேரப் பெற்றுத் தந்தது. அவரின் மலையாள, ஆங்கிலக் கவிதைகள் மிகச் சிறப்பானவை, இந்தியாவிலும் இங்கிலீசு பேசும் மக்களிடையேயும் பிரபலமானவை.

ஒருநாள் கமலாதாஸ் கேடுகெட்ட இந்து மதத்தை விட்டு வெறியேறினார். இசுலாத்தைத் தழுவினார்.இந்தியத் தாளுலகம் வழக்கம் போல ஓலமிட்டது, ஒப்பாரி வைத்தது. அவரின் இந்த முடிவுக்கான மூலக் காரணத்தைத் தெரிந்து கொண்டு அதைச் சீரமைக்க யாரும் முன்வரவில்லை. பெண் அடிமைத் தனத்தை உடைத்ததில் மலையாளத்தில் இவரே முதல்வர். இந்துமதக் கூட்டுப் பெட்டி மடமையை விட்டு வெளியேறி மதம் மாறியவர்.

இவரே மற்றொன்றையும் அறிவித்துள்ளார். தன் இறப்புக்குப் பின் தான் புதைக்கப்படக் கூடாது; எரிக்கப்பட வேண்டும் - அதிலும் மின்எரிகாட்டில் எவ்விதச் சடங்குகளும் இன்றி - என்று கூறிவிட்டார்.

இப்போது அவரின் பெயர் சுரய்யா. கமலா சுரய்யா. கமலா என்றால் தாமரை. சுரய்யா என்றால் விடிவெள்ளி. அவரும் விண்மீனாகத் தெரியும் கவிஞர்தான். தம்மைப் பெண் கவிஞர் என்றோ பெண் எழுத்தாளர் என்றோ குறிப்பிடக் கூடாது என்பவர். அய்ம்பதுக்கும் மேற்பட்ட புலவர்கள் சங்ககாலத்தில் பாடல்கள் எழுதிய பெண்கள் என்ற நிலை இருந்தும் இங்கே தமிழிதழ் நடத்துபவர்கள் பெண் எழுத்தாளர் என்றே அடையாளப் படுத்துகிறார்கள் அல்லவா? தமிழின் நிலையே அப்படி என்றால் மற்ற மொழிக்காரர் நிலை எப்படி வேறு மாதிரி இருக்கும்? அதுதான் அவர் பற்றியும்…

மலையாளச் சூழல் அவர் மனதை நோகடித்துவிட்டது. சிறிது பகையுள்ள இசுலாமியப் பெண் என்பதால் அடிக்கடி அவரிடம் பணம் கேட்டுத் தொல்லைப்படுத்தும் இசுலாமியப் பெயர் கொண்ட அமைப்புகள் கொஞ்சம் நோகடித்தன. புகழ்பெற்ற இவர் இந்து மதத்தை உதறிவிட்டுப் போனதால் இந்துத்துவ வெறியர்களுக்குக் கோபம். விளைவு… இவர் கொச்சியை விட்டுப் போய் விட்டார். புனேயில் தங்கப்போகிறார். அங்கே இவரின் மகன், மருமகள்,பேரன், பேத்திகளுடன் தங்கப் போகிறார்.

பெண் அடிமைத் தனத்தை உடைத்ததில் மலையாளத்தில் இவரே முதல்வர். இந்துமதக் கூட்டுப் பெட்டி மடமையை விட்டு வெளி-யேறி மதம் மாறியவர். இவரே மற்றொன்றையும் அறிவித்துள்ளார். தன் இறப்புக்குப் பின் தான் புதைக்கப்படக் கூடாது; எரிக்கப்பட வேண்டும் - அதிலும் மின்எரிகாட்டில் எவ்விதச் சடங்குகளும் இன்றி - என்று கூறிவிட்டார்.

சாவுக்குப் பின் செய்யப்படும் சடங்குகளில் தனக்கு நம்பிக்கையில்லை எனக் கூறிவிட்டார். (இப்படித்தான் நேருவும் எழுதிவைத்தார். ஆனால் இந்திராகாந்தி செய்தது என்ன என்பது நினைவிருக்கலாம்) எலும்புகளை நீரில் கரைக்க ஆற்றில் மூழ்க வேண்டாம்! அதனால் சளி பிடிக்கும். காய்ச்சல் வரும். உனக்குக் காய்ச்சல் வந்தால், மகனே! என் மனம் வருந்தும். எனவே எதையும் செய்யாதே என இதிலும் தன் நகைச்சுவையைக் காட்டியுள்ளார்.

இசுலாத்திலும் கிறித்தவத்திலும் மறுபிறப்பு கிடையாது. இறுதித் தீர்ப்பு நாள் உண்டாம். அன்றைய நாளில் நீதிபதியின் முன்பு "ஆஜராக" வேண்டும்.அதற்கு வாய்ப்பாகப் பிணம்-எலும்புக் கூடாகவோ, மட்கிய மண்ணாகவோ இருக்க வேண்டுமாம் - எனவே எரிக்கக் கூடாதாம் - புதைக்க வேண்டும்! இந்த மதக் கோட்பாட்டின் மண்டையில் அடிக்கிறார் சுரய்யா! மாதவிக்குட்டி, கமலாதாஸ், கமலா சுரய்யா புதுமைப் பெண் அல்ல! புரட்சிப் பெண்!

http://www.unmaionline.com/20070302/12.htm

சிலநாட்களுக்கு முன் தசுலிமா நசுரினுக்கு ஆதரவாக காவடி தூக்கிய இந்துதுவாவாதிகள் கமலா பார்ப்பனீயப் புரட்டுகளைப் பற்றி சொன்னதற்காக செய்த இடைஞ்சல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பார்ப்பனர்களின் இரட்டைவேடம் இது. எனக்கு வியப்பான விசயம் என்னவென்றால், இசுலாமியராக மாறிய கமலா சுரைய்யா, தான் இறந்தபின் ஏன் புதைக்கக் கூடாது என்றார்? இசுலாமியர்கள் இம்மை-மறுமை என்று பேசுவார்களே. கமலா சுரைய்யா அதிலிருந்து முரன்படுகிறாரே? இதுபற்றி இசுலாமிய அன்பர்களின் கருத்து என்ன?

இந்தியாவைத் தோற்கடித்த கிருஷ்ணன்!!!

March 19, 2007

கிரிக்கெட் விளையாட்டுகளில் அவசியமே இல்லாமல் மதவெறியூட்டி வன்மத்தை வளர்த்து மதச்சண்டைகள் எக்காரணம் கொண்டும் ஓய்ந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் நம்நாட்டு காவிக்கும்பல், இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளின்போது முஸ்லிம் ரசிகர்களுடன் வம்பு செய்வார்கள். இந்திய வீரர்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக பார்ப்பன புரோகிதர்கள் புதுப்புது பூசை புணஸ்கரங்களைச் செய்து மக்களை ஏமாற்றி ரசிகர்களிடமும் உண்டியல் குலுக்கி காசுபார்ப்பதை கண்டுபிடித்துள்ளார்கள். கிரிக்கெட் செய்திகளைத் தேடியதில் இன்னொரு வினோதமான செய்தியும் கண்ணில் பட்டது! பங்களாதேஷிலுள்ள இந்துக்கள், அந்நாட்டு அணி வெற்றிபெற வேண்டுமென்பதற்காக "Astitte Bangladesh" என்ற இயக்கத்தை சேர்ந்தவர்கள் கிருஷ்ண பரமாத்வுக்கு "Jagyo" பூசை செய்து பங்களாதேஷை வெற்றி பெறச் செய்ய ஆதரவு கேட்டிருக்கிறார்களாம்! மெளலவி பஜாரிலுள்ள காளி கோயிலில் முந்தாநாள் பூசைக்கு அனைவரையும் அழைத்துள்ளார்களாம்! நேற்றிரவு நடந்த போட்டியில் கிருஷ்ணன், பங்களாதேஷிகளின் கோரிக்கையை ஏற்று இந்தியாவைத் தோற்கடித்து விட்டார். இந்தியர்களின் முதுகில் குத்திய நன்றி கெட்டத்துரோகி கிருஷ்ணனை என்ன செய்யலாம்? செய்திக்கான சுட்டி : http://in.sports.yahoo.com/070316/43/6ddd4.html

சமஸ்கிர்தமும் அறிவியலும்

March 5, 2007

பார்ப்பனர்களின் தேவபாஷையான சமஸ்கிர்தம் 1930 ஆம் ஆண்டுவரையில் இந்திய மருத்துவத் துறையில் சமஸ்கிர்தம் போதிக்கப்பட்டதாம்!  கணினி மென்பொருள் எழுதுவதற்கேற்ற மொழி என்ற புரளியை ஒரு  ஐரோப்பிய பத்திரிக்கை எழுதியதாகச் சொல்லி, பார்ப்பன சமஸ்கிர்த பாஷையை ஆஹா! ஓஹோ என்று சில வலைப்பூ அன்பர்கள் சிலாகித்து எழுதி வருகிறார்கள். ஆமாம்! அதற்கென்ன வந்தது இப்போது என்கிறீர்களா?

பிராமணர்கள் எதையும் எல்லா மூடப்பழக்க வழக்கங்களையும் விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்டது என்று வாதிடுவது வழக்கம். ஆனால் மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் இதில் முற்றாக மாறுபடுகின்றார்கள். சேது சமுத்திரத்திலுள்ள மணல் திட்டுகளை "குரங்குகள் கட்டிய பாலம்" என்று சொல்லவில்லையா! அதுபோலதான் சமஸ்கிர்த மொழியைப் பற்றிய புரட்டுகளும் என்பதைப் பார்ப்போம்.

இதோ சில எடுத்துக்காட்டுகள்:

1) பூமி தட்டையானது
நரசிங்கபுராணம் பக்கம் 169 அபிதான சிந்தாமணி கூறுகின்றது பூமி தட்டையானது. ஆனால் இன்று விஞ்ஞானம் ஐயத்திற்கிடமின்றி பூமி உருண்டையானது என்று நிரூபித்துள்ளது.

2) பூமி, சூரியன் - சந்திரன் இவற்றிற்கிடையேயுள்ள இடைவெளி தூரம்:
விஷ்னுபுராணம் கூறுகின்றது: சூரியன் 800,000 மைல்களுக்கப்பால் இருப்பதாகவும், சந்திரன் 2,200,000 மைல்களுக்குப்பால் இருப்பதாகவும் கூறுகின்றது. ஆனால் விஞ்ஞானம், சந்திரன் தான் பூமிக்குப் பக்கத்தில் இருக்கின்றது என்றும் அதற்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரம் 240,000 மைல்கள் என்றும் சூரியன் 93,000,000 மைல்களுக்கப்பால் இருக்கின்றது என்றும் கண்டுபிடித்து நிரூபித்துள்ளது.

3) பூமியின் பரப்பளவு:
மார்கண்டேய புராணம் கூறுகின்றது: பூமியின் பரப்பளவு 4,000,000,000 சதுர மைல்கள். ஆனால் விஞ்ஞானம் அறுதி இட்டுக் கூறுகின்றது. பூமியின் பரப்பளவு 190,700,000 சதுர மைல்கள் மட்டுமே!

4) மாட்டுச்சாணம் - விபூதி
வேதங்கள் கூறுகின்றன. பசு புனிதமானது. ஆகவே அதுவணக்கத்திற்குரியது.
பிராமணர்கள் இன்னொரு படி மேலே போய் மாட்டுச் சாணத்தில் எடுக்கப் படும் சாம்பல் புனிதமானது. அதற்கு நோய் நீக்கும் மருத்துவ குணங்கள் உண்டு என்றெல்லாம் பிரஸ்தாபிக்கின்றனர். ஆனால் விஞ்ஞானம் இது அப்பட்டமான பொய் என்று நிரூபித்துள்ளது.

விபூதி பற்றி பேராசிரியர் கா.திருஞான சம்பந்தன் M.Sc., M.C.A.(www.geocities.com/shivaperumant) அவர்களின் கட்டுரையைப் படித்ததில் சில சுவாரசியமான சந்தேகங்கள் எழுந்தன.

1) திருநீற்றின் பெருமையும் அதனை அணிவதால் வரும் நன்மைகளும்:
      1. உடல் நாற்றத்தைப் போக்கும்.
     2. தொத்து நோய்க் கிருமிகளைக் கொல்லும்.
     3. தீட்டுக் கழிக்கும்.
     4. உடலைச் சுத்தம் செய்யும்.
     5. வியாதிகளைப் போக்கும்.
     6. பில்லிசூனியம், கண்ணேறு பாதிக்காது காக்கும்.
     7. முகத்திற்கு அழகைத் தரும்.
     8. ஞாபக் சக்தியை உண்டாக்கும்.
     9. புத்திக் கூர்மையைத் தரும்.
    10. ஞானத்தை உண்டாக்கும்.
    11. பாவத்தைப் போக்கும்.
    12. பரக்தியைத் தரும்.
முன்னாள் மேற்கு ஜெர்மனியைச் சார்ந்த விஞ்ஞானக் கழகம்  மாட்டுச்  சாணத்தின் சாம்பலை நன்றாக ஆராய்ந்து மாட்டுச் சாணத்திற்கு மருத்துவ குணம் இல்லை என்று அறிவித்துள்ளது.
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு நெற்றியில் ஏற்பட்ட ஒவ்வாமைக்கு மருத்துவர் கூறிய அறிவுரை, "விபூதி, பட்டை நாமம் இடுவதை தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்தினார்.(அந்த மருத்துவர் பாகிஸ்தானிலிருந்தோ அல்லது சவ்தி அரபியாவிலிருந்தோ இதைச் சொல்லவில்லை!) இந்த விஞ்ஞான உண்மைகளை அறியாத பாமர்கள் தங்கள் இல்லங்களை மாட்டுச்சானத்தால் மெழுகியும் நெற்றியிலும் உடலிலும்  மாட்டுச்  சாணத்தைப் பூசிக் கொள்கின்றனர்.
2) கருநிற விபூதியும், செந்நிற விபூதியும், புகைநிற விபூதியும், பொன்னிற விபூதியுந் தரிக்கலாகாது எனும் பேராசிரியர் சம்பந்தனின் கூற்றுக்கு எதிராக வட்நாட்டு சங்பரிவார சண்டாளர்கள் செந்நிற விபூதியையே நாமமாக இடுகின்றார்கள்.
3) விபூதி தரியாதவருடைய முகம் சுடுகாட்டுக்குச் சமமாகும்!
இது பார்ப்பனத் தனமான உளரலாகவே எனக்குப் படுகிறது. (பேராசிரியர் பார்ப்பனர் அல்ல) விபூதியிடாத பால்வடியும் குழந்தை முகம் சுடுகாடாகவா தெரிகிறது? ஐயர்களும் ஐயங்கார்களும் விபூதியிட்டுக் கொள்வதற்கு சமயக் காரணங்கள் இருக்கலாம். மாடுகளுக்கும் சிலைகளுக்கும் ஏன் விபூதியிட வேண்டும்?
இப்பொழுது  புரிந்திருக்குமே  கருஞ்சட்டைக்காரர்கள் ஏன் சமஸ்கிர்தத்தில் எழுதப்பட்ட புராணங்களையும், அவை போதித்த  மூடவேதங்களையும் எதிர்க்கிறார்கள் என்று! அப்புறம் கணினி மென்பொருளாக்க மொழி பற்றி சில மாணவர்களிடம் விசாரித்ததில் சி,சி++,பேசிக் போன்ற மென்பொருளாக்க கணினி நிரலிமொழிகளை, பார்ப்பனர்கள் நாம் பயன்படுத்தும் மொழிகளுடன்  குழப்பிக் கொண்டுள்ளதாகவே கருத்து தெரிவித்தார்கள்.
இல்லை இல்லை பார்ப்பன தேவபாஷையான சமஸ்கிர்தம் கணினி மொழிக்கேற்றது என்று வாதிடும் எவராவது ஒரு சிறிய சமஸ்கிர்த மென்பொருள் ??? எழுதலாமே!
இதுபற்றி  கணினி மொழி வல்லுனர்கள் விளக்கினால் பயனாக இருக்கும்.
எது எப்படியோ "யாமறிந்த மொழிகளே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்" என்பதையே என் கருத்தாக வைக்கிறேன்.

குரங்குகள் கட்டிய பாலம்

March 1, 2007

சாதாரணமாக போக்குவரத்திற்காக பாலம் கட்ட பொறியாளர்,கொத்தனார், சித்தாள், சிமெண்ட், மணல், ஜல்லி  ஆகியவை குறைந்த பட்சத் தேவைகள் என்பதை அறிவோம். உலகத்திலேயே இவை எதுவுமின்றி ஒரு பாலம் இருக்கிறது அதுவும் சுமார் பத்து கிலோ மீட்டர் தூரத்திற்கு இரு நாடுகளை இணைக்கும் பாலம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஆம், நம்  நாட்டின் தென்கோடியிலுள்ள இராமசுவரத்திலிருந்து இலங்கைக்கு பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அனுமார் பாலம்! அமெரிக்காவின் நாஸாவிலிருக்கும் பார்ப்பனர்களால் திட்டமிட்டு பரப்பப்பட்ட இந்த ஆரியப் புரட்டை தினமலம் உள்ளிட்ட நாளிதழ்களும் பார்ப்பனச் சிறுக்கி செயலலிதாவும் அடிக்கடி சொல்லி சல்லியடிக்கிறார்கள்

அயோத்தியில் இராமன் பிறந்ததாகக் கூறப்படும் ‘இராமஜென்ம பூமி’யில் தான் - அதுவும் தற்போது இடிக்கப்பட்டுள்ள பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று அண்மைக் காலமாக அடம்பிடித்து வந்த இந்த இந்து வெறியர்களும் அவர்களின் நிறுவனமான ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் இப்போது இந்திய மய்ய அரசின் திட்டமான சேதுக்கடல் திட்டத்தின் ஒருபகுதியான கடலை ஆழப்படுத்தும் பணிக்கு ஊறு செய்யும் வகையில் இவர்களின் கற்பனையான ‘இராமர் பாலத்தைச் சேதப்படுத்தக்கூடாது - எனக் கூப்பாடு போட்டு வருகிறார்கள்.

இதுபற்றி இந்து முன்னணியைச் சேர்ந்த இராம.கோபால அய்யரும் அவரது கும்பலும் சிலபல நாட்களாகவே குரல் கொடுத்துக் குழப்பம் விளைவித்து வருகிறார்கள்.தற்போது, இராமேசுவரம் பகுதியில் கடலை ஆழப்படுத்தும் பணியை நிறுத்தக்கோரி வழக்குத் தொடர்ந்துள்ள இராமநாதபுரம் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் குப்பு ராமு அவர்களின் கருத்து ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழில் வெளிவந்து அதன் ஒரு பகுதி 18.1.2007ஆம் நாளிட்ட ‘காலைக்கதிர்’ நாளிதழில் எடுத்து வெளியிடப்பட்டுள்ளது.

புராணங்கள் புகல்கின்றனவாம்!

அதில் அவர் கூறுகிறார்:“ராமேசுவரத்துக்கும் இலங்கைக்கும் இடையே ராமர் பாலம் அமைக்கப் பட்டதாகப் புராணங்கள் சொல்கின்றன. தற்போது தனுஷ்கோடியிலிருந்து பார்க்கையில் திட்டுத் திட்டாகத் தெரியும் மணல் மேடுகளின் கீழ்ப்பகுதியில்தான் இந்தப் பாலம் உள்ளது.”

பொய்யான கதை மெய்யானதாகுமா?
இவர் கூறுவதைப் பார்த்தால், புராணங்-களில் கூறப்பட்டுள்ள செய்திகள் எல்லாம் உண்மையாகி விடுமா? வரலாறாகி விடுமா? 

பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கக்கத்தில் வைத்துக் கொண்டு கடலில் முழுகினான் ஓர் அரசன்” என்றுதான் புராணம் கூறுகிறது.இதனால் இந்தக் கதை உண்மையாகி-விடுமா? புராணத்தில் கூறப்பட்டதாலேயே உருண்டையான பூமி தட்டையாகி விடுமா? இக்கருத்து அறிவியலுக்கு ஏற்புடையதாகி விடுமா?

அறிவியலாளர்கள் உரைப்பதென்ன?

தனுஷ்கோடிக்கும் தலை மன்னாருக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மணல் திட்டுகளின் வடபுறம் கடல் நீரோட்டம் இடமிருந்து வலமாகவும், தென்புறம் வலமிருந்து இடமாக இருப்பதால் இடையில் அமைந்துள்ள பகுதியில் மணல் சேர்ந்து, அவற்றின் மேல் பாசிப் படிமங்கள் தோன்றி, பாலம் போன்ற அமைப்பாக உருவானதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

இயற்கை - செயற்கை அல்ல!

மேற்கூறிய மணல் திட்டுகள், நேராக, பாலம் போன்று இணைக்காமல் வளைந்து, காணப்படுவதும் இவை இயற்கையாக உருவானதற்குச் சான்றாக விளங்குகிறது.
இதனைத்தான், ‘மணல் திட்டுகளின் அடியில் இராமர் கட்டிய பாலம் இருக்கிறது’ என்கிறார் இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்.

எது உண்மை?

அவர் மேலும் கூறுகிறார்:
“இப்படி ஒரு பாலம் இருக்கிறதா? எனச் சந்தேகம் வரலாம் ஆனால் கடலின் அடியில் பாலம் என்பதுதான் உண்மை. இதைக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’ தெளிவு-படுத்தியுள்ளது. (நாஸாவின் பார்ப்பனர்களின் எண்ணிக்கை மற்ற அமெரிக்க நிறுவனங்களில் இருப்பதைவிட சற்று அதிகம் என்பதைக் கவனத்தில் கொள்க)

அதைத் தொடர்ந்து, பல ஆண்டுகளாக எடுத்த படங்களையும் ‘நாசா’ வெளியிட்டுள்ளது.
சுமார் பதினேழு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது அது என, ‘நாஸா’ சொல்கிறது.”

சொல்லாத உண்மை

‘நாசா’ விண்வெளி ஆய்வு மையம் இதுபற்றிய படங்களை வெளியிட்டுள்ளது உண்மையே!
அது வெளியிட்டுள்ள படங்களில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கடல் மட்டத்திற்குச் சற்று, கீழே நீண்ட மணல் திட்டுகள் ஒரு பாலத்தைப் போன்று இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

இந்தப் படங்கள் குப்புராமு கூறுவது போல சில ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்படவில்லை. பல ஆண்டுகளுக்கு முன் ‘நாசா’ வெளியிட்ட படங்கள் அவை.ஆனால், “இவற்றின் வயது பதினேழரை இலட்சம் ஆண்டுகள் என்றோ, அல்லது இவை மனிதனால் உருவாக்கப்பட்டது என்பதா-கவோ, எப்போதும் தகவல் வெளியிடவில்லை.”

என, நாசா அறிவியலாளர்கள் திட்ட வட்டமாக மறுத்துவிட்டனர்.

நாங்களா சொன்னோம்?
குறிப்பாக, ‘இந்தப் பாலத்தை இராமாயண காலத்தில் கட்டினார்கள் என்று நாங்கள் கூறவே இல்லை’ என ‘நாசா’ அறிவியலாளர்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

குதியாட்டம் போடுவதா?

அப்படியானால், இப்படிப்பட்ட தகிடுதத்த வேலையை - பித்தலாட்ட திரிபுக் கருத்து எப்படி வெளிவந்தது?

‘இன்டோ லிங்க்காம் - வைஷ்ணவ நியூஸ் நெட் ஒர்க்’ என்னும் இணைய தள அமைப்புதான் இத்தகைய செய்தியை - ‘நாசா’ கூறாத செய்தியை நா கூசாமல் வெளியிட்டது.இதனை வைத்துக் கொண்டு-தான் இந்தக் குப்பு ராமு ஒரே குதியாட்டம் போட்டு நீதிமன்றத்தின் நெடிய வாயிலிலே போய் நின்று கொண்டிருக்கிறார்.

மறுப்புக் கோவை
இந்த இணையதளத்தின் பொய்யான - புரட்டான தகவலை அது வெளிவந்த காலகட்டத்திலேயே சில அறிவியல் வரலாற்று ஆய்வாளர்கள் மறுத்துள்ளனர்.

இதனை சன்டே டைம்ஸ் (Sunday Times) ஏடு 20.10.2002இல் வெளியிட்டுள்ளது.
அவற்றின் சில பகுதிகளை மட்டும் வெளியிடுவது பொருத்தமாக இருக்கும்.

எந்தத் தொடர்பும் இல்லை
ஜே.வி. நர்னீகர் என்பவர் புகழ்மிகு வானியல் - இயற்பியல் வல்லுநர் (Astrophysieist):
“கட்டுக்கதையாக (Myth)க் கூறப்படும் பாலத்தைக் கண்டுபிடித்துள்ளதாக வந்த செய்தியைக் கண்டேன். ஆனால், நாசாவின் கண்டுபிடிப்பிற்கும் இராமாயணப் பாலத்திற்கும் தொடர்பு இருப்பதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை!” என அவர் கூறியுள்ளார்.

சான்றுகள் இல்லையே!
ஆர்.எS.சர்மா எனப்படும் இராம் சரண் சர்மா என்பவர் ஒரு மூத்த வரலாற்று ஆய்வாளர்.
அவர் கூறுகிறார்: “இராமாயண காலப் பாலம் கட்டியதற்கு அகழ்வு ஆராய்ச்சிச் சான்றோ இலக்கியச் சான்றோ இல்லை. பாலம் போலத் தோன்றும் மணல் திட்டுக்களின் காலம் பதினேழரை லட்சம் ஆண்டுப் பழைமையது என்றே வைத்துக் கொண்டாலும், அந்தக் காலத்தில் மனிதர்களே இல்லை.

கிடைத்துள்ள சான்றுகளின் படி, இராமாயணம் எழுதப்பட்ட மிகப் பழங்காலம் கி.மு. 400 ஆகும்.
அய்ந்து கட்டங்களாக அது, வெவ்வேறு காலங்களில் விரிவு படுத்தப்பட்டது. 6000 சுலோகங்களாக இருந்த வால்மீகி ராமாயணம் கி.பி. 1200இல் 24,000 சுலோகங்களாக விரிந்தது.
இராமாயணக் கதை பற்றியே இலக்கியச் சான்று கி.மு. 1500 ஆண்டுகளுக்கு முன்பு இல்லை.
கதையில் கூறப்படும் பாலம் மற்றும் இலங்கை ஆகியன எந்த இடத்தில் இருந்தன என்பதையே இன்னும் முற்றாக அறிய முடியவில்லை.”

கேலிக்கூத்து
டில்லிப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டி.என்.ஜா ஒரு மூத்த வரலாற்றுப் பேராசிரியர்.
டி.என்.ஜா பின்வரு-மாறு கூறியுள்ளார்:

“நாசா” ஒளிப்படக் கருவி பிடித்த படங்கள் ஒரு புவியியல் வடிவமைப்பைக் காட்டுவன.
இயற்கையாக உருவான மணல் திட்டுகளின் தொடர்தான் காணப்படுகின்றது.இத்தொடர் ஒரு புவியியல் செய்திதான்! வரலாற்றுச் செய்தியன்று.

இராமனுடனும், இராமாயணத்துடனும் அதைத் தொடர்புபடுத்துவது கேலிக்குரியது.
காண்பன எல்லாவற்றையும் இராமாயணத்துடனும் மகாபாரதத்துடனும் இணைத்துச் சொல்வது கட்டுக் கதைதான்; வரலாறு ஆகாது!”

மனித இன மலர்ச்சி
இந்த இந்து வெறியர்கள் கூறுவது போல அவர்கள் கூறும் இராமர் பாலம் பதினேழரை லட்சம் ஆண்டுகள் என்பதாகவே வைத்துக் கொள்வோம்.
மனித இனவளர்ச்சியை ஆய்வோமானால் மதி மனிதன் (Homo Sapiens) எனப்படும் மனித இனம் தற்கால வகை மனித இனம் தோன்றியது ஏறத்தாழ 2 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தித்-தான். அதற்கும் முற்பட்ட நிமிர்நடை இனம் (Homo Erectus) எனப்படுவது குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட உயிரினங்கள் 7 லட்சம் ஆண்டுகட்கு முன்னர்தான் ஆஃபிரிக்காவிலிருந்து வெளிவந்தன.

குரங்குக் கூட்டமாக…

தற்போதைய மனித இனம் ஏறத்தாழ இரண்டரை அல்லது மூன்று லட்சம் ஆண்டுகட்கு முன்னர்தான் தோன்றின.

கண்டுபிடிக்கப்படாத கருவிகள்

கோடரி போன்ற ஆயுதங்கள், கருவிகள்-கூட அப்போது கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆனால் அந்தக் காலத்தில், இராமன் கருவிகள் கொண்டு பாலம் அமைத்ததாகக் கூறப்படுவது நம்பத்தகுந்ததா? அறிவியலுக்குப் பொருந்துவதா?

இராமன், இராவணன் போன்றோர் அரண்மனைகளில், மாடமளிகைகளில் இருந்து ஆட்சி புரிந்ததாகவும் பல்வகை அஸ்திரங்களைக் கொண்டு போர் புரிந்ததாகவும் கூறப்படுவது அறிவுக்குப் பொருந்துவதாக உள்ளதா? இல்லை! இல்லை! இல்லவே இல்லை!

நிறுத்து! நிறுத்து!

இப்படிப்பட்ட நிலையில், தொடர்ந்து குப்பு ராமு கூறுகிறார்:
“தற்போது சேது சமுத்திரத் திட்டத்துக்காக கடலை ஆழப்படுத்தும் பணி இந்த ராமர் பாலத்தை நெருங்கிவிட்டது. அவ்வாறு ஆழப்படுத்தும்போது, இந்தப் பாலம் சேதம் அடையும் என்கிறார்கள். பாலம் உடைவதைத் தடுக்கத்தான் கடலின் அகழாயும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்கிறோம்”

யாரோ? அவர் யாரோ?

கடலை ஆழப்படுத்தும்போது இராமர் பாலம் சேதமடையும் என்கிறார்களாம்!
யார் அப்படிக் கூறுகிறார்கள்? அவர்கள் யார்? சொல்வாரா குப்புராமு அவர்கள்?
கடலில் பாலம் போன்றுதான் தோற்றமுள்ளதே தவிரப் பாலம் எதுவும் இல்லை என்கிறபோது அது எப்படிச் சேதமடையும்?

ஆசையைப் பாருங்கள்!
கற்பனையான பாலம் கற்பனையாகச் சேதம் அடையுமா? இந்தக் கற்பனையான கட்டுக் கதையான பாலத்துக்காக சேது சமுத்திரத் திட்டம் நிறுத்தப்படவேண்டுமாமே!
பொருளாதார, அரசியல், சமுதாய, மக்கள் நல அடிப்படையில் உருவாகும் சேது சமுத்திரத் திட்டத்தின் கடல், ஆழப்படுத்தும் பணி, வெறும் இந்து மத நம்பிக்கையிலான ஆதாரமற்ற, அறிவியல் அடிப்படையில்லாத பொய்யான பாலத்துக்காக நிறுத்தப்பட வேண்டுமா?அப்படியே ஏற்க வேண்டுமா?

அவர் தொடர்ந்து கூறுகிறார்:
“வழிபாட்டுக்குரிய புனிதச் சின்னம் உடைக்கப்பட்டு விடக் கூடாது என்பது தான் எங்கள் கோரிக்கை” இல்லாத,கற்பனையான மத நம்பிக்கையின் வழியிலான பாலம் வழிபாட்டுக்குரியதாம்! புனிதச் சின்னமாம்!

இவர்கள் கூறுவதை அரசு அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமா? இது என்ன இந்து மத நாடா? இது என்ன இந்துமத அரசா? வழிபாட்டுக்குரிய புனிதச் சின்னம் பிள்ளையார் சிலையினை மட்டும் உடல் பகுதிகளை வெட்டி, அறுத்து, உடைத்துத் துண்டுத் துண்டாக ஆக்கிக் கடலில் கரைக்கலாமா? பதில் கூறுவாரா இந்த ஆர்.எஸ்.எஸ்.ஆசாமி?

மதவெறி மாய்ப்போம்
மேலும் கூறுகிறார்: “இந்தப் பாலத்தைச் சேதப்படுத்தாமல் மாற்றுப் பாதையில் திட்டம் வகுக்க வேண்டும்” சேது சமுத்திரத் திட்டத்திற்கான கடலியல், சுற்றுப் புறச் சூழலியல், பொறியியல் வல்லுநர்கள் கூறுவதை விட்டுவிட்டு இப்படிப்பட்ட கோமாளித்தனமான, மூட நம்பிக்கையாளர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டுமா?
நடக்காது; நடக்கக் கூடாது! நடக்கவும் விடலாகாது! இந்து மத வெறி மண்டையில் ஏறி, மூளையில் ஊறி இப்படி எல்லாம் பிதற்றுவதை இப்படிப்பட்டவர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்! இல்லையேல் நிறுத்த வைப்போம்!